ADDED : ஜன 11, 2025 01:49 AM
அ நிறம் | அளவு
சேலம்,:சேலம் மாவட்டம், ஏற்காடு, அடிவாரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 59. இவர், சேலம் அருகே சின்ன சீரகாபாடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
அவர், சில மாணவியரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சில மாணவியர், பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, 'சைல்ட் ஹெல்ப் லைன்' எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையறிந்து கல்வித்துறை அதிகாரிகள் தகவல்படி, டவுன் மகளிர் போலீசார் விசாரித்து, சுப்ரமணி மீது நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
