/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாதி வழியில் நின்ற டவுன் பஸ்சால் அவதி
/
பாதி வழியில் நின்ற டவுன் பஸ்சால் அவதி
ADDED : ஜன 22, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதி வழியில் நின்ற டவுன் பஸ்சால் அவதி
தலைவாசல்,:ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தலைவாசல் வழியே வீரகனுாருக்கு இயக்கப்பட்ட, தடம் எண்: 35, அரசு டவுன் பஸ், நேற்று மாலை, 5:30 மணிக்கு மும்முடியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ் பழுதாகி, சாலையோரம் நின்றது. இதனால், பஸ்சில் வந்த, 20 பயணியர் இறக்கிவிடப்பட்டனர். பின், மாற்று பஸ்சில், அந்த பயணியர் சென்றனர். பின் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பஸ் பழுதுபார்ப்பு பணி நடந்தது.
இதுகுறித்து போக்குவரத்து பணியாளர்கள் கூறுகையில், 'டவுன் பஸ்சின் கியர் பாக்ஸ், 'லாக்' ஆனதால், பஸ்சை இயக்க முடியவில்லை'
என்றனர்.