ADDED : ஜன 29, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் - கார் மோதல்: கொத்தனார் பலி
இடைப்பாடி,: கொங்கணாபுரம், எருமைப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மகன் பாஸ்கர், 25. கொத்தனாராக பணிபுரிந்த இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு கொங்கணா
புரத்தில் இருந்து வீட்டுக்கு, 'பல்சர்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். எருமைப்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது எதிரே வந்த, ஈகோ கார் மோதியதில், பாஸ்கர் படுகாயம் அடைந்தார்.
இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீசார், காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை
தேடுகின்றனர்.

