தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கடன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலைகலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணா

கடன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலைகலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணா

கடன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலைகலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணா


ADDED : பிப் 01, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலைகலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணா

சேலம்: கடன் விவகாரத்தில் தறித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உறவினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கணக்குப்பட்டி, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை, 29. வீட்டில் தறித்தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி சினேகா, மகன், மகள் உள்ளனர். அய்யந்துரை, இரு ஆண்டுக்கு முன், இளம்பிள்ளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 4 லட்சம் கடன் வாங்கினார். சரியாக தவணை செலுத்தாததால், வங்கி ஊழியர்கள் வீட்டுக்கு வந்து கேட்டுள்ளனர். இதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட, சினேகா, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு

சென்றார்.நேற்று முன்தினம் காலை, வங்கி ஊழியர்கள் வந்தபோது, ஒரு நாள் அவகாசம் கேட்டு அனுப்பிவிட்டார். மதியம் கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அவரது தாய் உள்ளிட்ட சிலர், கதவை உடைந்து உள்ளே சென்றபோது, அய்யந்துரை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் அய்யந்துரை உறவினர்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.

அப்போது உறவினர்கள், 'கடன் கட்ட தொந்தரவு கொடுத்த தனியார் நிறுவனம் மீதும், வழக்கு பதியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யந்துரை குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என கூறினர். அதற்கு, 'இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து

சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us