தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி'

'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி'

'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி'


ADDED : பிப் 01, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி'

சேலம், : தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:சீமானுடன் ஆயிரம் கருத்துகள் இருந்தாலும், நட்பு, நாகரிகம் கருதி, அவரை விமர்சிக்க விரும்பவில்லை. தி.மு.க., முதன் முதலில் ஆட்சிக்கு வர உழைத்த பெரும்பாலான தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அத்தகைய ஆளுமைகள் இல்லாததாலேயே சமூகநீதி கிடைக்க தாமதமாகிறது.

வன்னியருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கினால், பிற சமூகத்தினர் ஓட்டுப்போட மாட்டார்கள், எதிர்ப்பர் என, முதல்வர் கருதினால், முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது தானே. 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கியபோதும், 1989ல், பா.ம.க., தொடங்கிய போதும், ராமதாஸ் வைத்த முதல் கோரிக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதுதான். ராமதாசும், அன்புமணியும், வன்னியருக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கள் அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என வலியுறுத்துவதை, சட்டசபையில், எல்லா தலைவர்களும் அதே குரலாக ஒலிக்கிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே, இட ஒதுக்கீடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us