/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மாத்திரை விவகாரம்மெடிக்கல், கூரியர் நிறுவனங்களுக்கு 'கிடுக்கி'
/
போதை மாத்திரை விவகாரம்மெடிக்கல், கூரியர் நிறுவனங்களுக்கு 'கிடுக்கி'
போதை மாத்திரை விவகாரம்மெடிக்கல், கூரியர் நிறுவனங்களுக்கு 'கிடுக்கி'
போதை மாத்திரை விவகாரம்மெடிக்கல், கூரியர் நிறுவனங்களுக்கு 'கிடுக்கி'
ADDED : பிப் 02, 2025 01:42 AM
போதை மாத்திரை விவகாரம்மெடிக்கல், கூரியர் நிறுவனங்களுக்கு 'கிடுக்கி'
சேலம், : போதை மாத்திரை வைத்திருந்தவர், விற்றவர் என, 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மெடிக்கல், கூரியர் நிறுவனங்களுக்கு, போலீஸ் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகரில், 'போதை' மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சமீப நாட்களில், 20க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், சிலரது வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். விசாரணையில், ஆன்லைன் மூலம் மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, வலி நிவாரணி மாத்திரைகளை, 15 ரூபாய்க்கு வாங்கி, பல்வேறு முகவர்களை கடந்து, 200 ரூபாய்க்கு மேல் விற்பது தெரியவந்தது.
இதனால் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி, அந்தந்த உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போதை மாத்திரை விற்பனையை தடுக்க, மருந்தகம், கூரியர் நிறுனங்களுக்கு, பல்வேறு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக மருத்துவர் பரிந்துரை சீட்டில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும்; மருத்துவர் கையெழுத்தை போலியாக போட்டு வாங்குகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்; ஒரே மருத்துவர், வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி பரிந்துரைத்தால், அவரது தகவல்களை சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறியதாவது: அறுவை சிகிச்சை செய்தவர்கள், நரம்பு தளர்ச்சி, கேன்சர் உள்பட, தாங்க முடியாத வலிகளுக்கு, வலி நிவாரணி மாத்திரை, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையை சிலர் போதைக்கு, பவுடராக்கி தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக்கொள்கின்றனர். போலி மெடிக்கல் பெயர், முகவரி வைத்து, வலி நிவாரணி மாத்திரைகளை, சிலர் ஆர்டர் செய்கின்றனர். இந்த மாத்திரைகளை வழங்க, ஆன்லைனில் உரிமம் கேட்பதில்லை. கூரியர் நிறுவனங்கள் மூலம், அந்த மாத்திரைகள், சேலம் வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறிப்பாக, 'பார்சல்' வந்ததும், கூரியர் நிறுவனத்தினர் சம்பந்தப்பட்டவருக்கு போன் செய்கின்றனர். ஆர்டர் செய்தவர்கள், நேரில் வந்து வாங்கிச்செல்கின்றனர். ஆனால் ஆர்டர் செய்தவர்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும். அப்போது, அது மெடிக்கல் இல்லையென்று தெரிந்தால், தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை எனில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் சரியான முறையில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யாத நிறுவனங்கள், வாங்கியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மெடிக்கல் ஷாப்களில் மருத்துவர் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வழங்கக்கூடாது. மருத்துவர் சீட்டு மூலம் அடிக்கடி, அதிக எண்ணிக்கையில் வலி நிவாரணிகளை வாங்குபவர் குறித்தும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிந்துரை சீட்டு தற்போது வழங்கப்பட்டதா என்பதை பார்த்து மாத்திரை வழங்க வேண்டும். பழைய சீட்டுடன் வருவோருக்கு மாத்திரை வழங்கக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.