/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முனியப்பன் கோவில் திருவிழா பொங்கல் வைத்த பக்தர்கள்
/
முனியப்பன் கோவில் திருவிழா பொங்கல் வைத்த பக்தர்கள்
முனியப்பன் கோவில் திருவிழா பொங்கல் வைத்த பக்தர்கள்
முனியப்பன் கோவில் திருவிழா பொங்கல் வைத்த பக்தர்கள்
ADDED : பிப் 06, 2025 01:27 AM
முனியப்பன் கோவில் திருவிழா பொங்கல் வைத்த பக்தர்கள்
சேலம்: சேலம், குரங்குச்சாவடியில் உள்ள வெண்ணங் கொடி முனியப்பன் கோவில் தை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முனியப்பனுக்கு பட்டாடை உடுத்தி பரிவட்டம் கட்டி, மலர்களால் அலங்காரம்
செய்யப்பட்டது. தொடர்ந்து, 1,008 எலுமிச்சை பழ மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. பின் கோவிலை சுற்றி, திரளான பக்தர்கள், ஆடு, கோழி பலி கொடுத்து பூஜை செய்தனர். இதனிடையே ஏராளமான பெண்கள் கோவில் அருகே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். மேலும் வேண்டுதல் நிறைவேற்றி தந்ததால், முனியப்பனுக்கு பிடித்தமான பீர், சுருட்டு உள்ளிட்ட பொருட்கள் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் ஓமலுார், வண்டிப்பேட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிங்க வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், தைப்பூச தேர் திருவிழாவின், 3ம் நாளான நேற்று, சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி திருவீதி உலா வந்தனர்.