sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் மனமுருகி பக்தர்கள் வழிபாடு

/

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் மனமுருகி பக்தர்கள் வழிபாடு

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் மனமுருகி பக்தர்கள் வழிபாடு

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் மனமுருகி பக்தர்கள் வழிபாடு


ADDED : பிப் 12, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் மனமுருகி பக்தர்கள் வழிபாடு

சேலம்:சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தை ஒட்டி சிறப்பு பூஜை, அபிேஷகம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள், மனமுருகி வழிபட்டனர்.

தைப்பூசத்தை ஒட்டி, சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜாகீர்அம்மா பாளையம் அருகே காவடி பழநியாண்டவர் கோவிலில் ரத்தின கீரிடத்தில் ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். வேண்டுதல் வைத்த பக்தர்கள், காவடி எடுத்து கோவில் பிரகாரத்தில் வலம் வந்து முருகனை தரிசனம் செய்தனர். பேர்லண்ட்ஸ் முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் முருகன் சன்னதி முன், 6 வெற்றிலை இலையில் அகல் விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் மாநகரில் உள்ள ஊத்துமலை முருகன், கந்தாஸ்ரமம், ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், சுவாமிக்கு, 16 வகை அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர், மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் ரத்தின கிரீடங்களுடன், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். 'முருகனுக்கு... கந்தனுக்கு... அரோகரா' என கோஷம் எழுப்பி, பக்தர்கள் வழிபட்டனர்.

வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவருக்கு அபி ேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து புஷ்பம், ரத்தினங்கள், சந்தன காப்பு, புஷ்ப அலங்காரத்தில் பாலசுப்ரமணியர் அருள்பாலித்தார். பாலதண்டாயுதபாணி தங்க கவசத்திலும், வள்ளி, தெய்வானையுடன் பாலசுப்ரமணியர் திருமணக்கோலத்திலும் காட்சி அளித்தனர். முன்னதாக குறிஞ்சி நில தமிழ் குறவர்கள் சார்பில், குறமகள் வள்ளிக்கு, காவல்கார குறிஞ்சி மக்கள் மா, பலா, மலை வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், தர்பூசணி, தேன், தினை மாவு போன்றவற்றை, சீர்வரிசை பொருளாக எடுத்து வந்து, பாலசுப்ரமணியரிடம் வழிபாடு செய்தனர்.

அதேபோல் ஆத்துார் சுப்ரமணியர், ராயர்பாளையம் குமரன்மலை, நத்தக்கரை முருகன், வரகூர் குன்று மீதுள்ள முருகன், தம்மம்பட்டி திருமண்கரடு முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.

மேட்டூர், 16 கண் மதகு, குமரன் குன்று, சின்னபழநி பாலமுருகன் கோவிலுக்கு, பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தரிசனம் செய்தனர். தங்கமாபுரிபட்டணம் தங்கமலை முருகன், மேட்டூர் பன்னீர்மலை முருகன், ஞானதண்டாயுதபாணி, கொளத்துார் சுப்ரமணியர், கோவிந்தபாடி சுப்ரமணியர், கத்திரிபட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஏற்காடு முருகன் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் பால், தேன், இளநீர், தயிர், மஞ்சள், விபூதி அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.

சங்ககிரி, சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆறுமுக வேலன் சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரத்துக்கு பின் பூஜை நடந்தது. பின் பக்தர்கள் காவடிகளுக்கு பூஜை செய்து, முக்கிய வீதிகள் வழியே காவடி எடுத்து ஆடியபடி, பக்தர்கள் வலம் வந்தனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பால் அபிேஷகம்

ஓமலுார் செவ்வாய் சந்தையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில், தைப்பூச ஆன்மீக மன்றம் சார்பில், செந்திலாண்டவர் சுவாமிக்கு, 108 குட பால் அபி ேஷகம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் செந்திலாண்டவர் அருள்பாலித்தார். ஓமலுார், அக்ரஹாரத்தில் உள்ள வசந்தீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு அபிேஷகம்

நடந்தது. கருப்பூர் கந்தசாமி கோவிலில் நடந்த காவடி ஆட்டத்தில் திரளான

பக்தர்கள் பங்கேற்றனர்.

திருக்கல்யாணம்

இளம்பிள்ளை, பாலசுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு, 16 வகை பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. பின் முருகனின் அண்ணன் விநாயக பெருமான் தோளில் பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் அமர்ந்த கோலத்தில், மூலவரை அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. கோவில் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள், திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜை செய்து வேத மத்திரம் முழங்க, சுப்ரமணியர் கரத்தில் தொட்டு, வள்ளி, தெய்வானை கழுத்தில் அணிவித்து, கல்யாணத்தை நடத்தி வைத்தனர். மணக்கோலத்தில் பாலசுப்ரமணியர், சப்பரத்தில் வீதிஉலா வந்தார்.






      Dinamalar
      Follow us