தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலைப்பணிக்கு எச்சரிக்கை பலகை இல்லைபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

சாலைப்பணிக்கு எச்சரிக்கை பலகை இல்லைபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

சாலைப்பணிக்கு எச்சரிக்கை பலகை இல்லைபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி


ADDED : பிப் 18, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அங்கு, திருச்சி, மதுரை, சேலம், கரூர், கோவை, ஈரோடு, துறையூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மப்சல் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. புதிய பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே, ரிங் ரோடு அமைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், திருச்சி, கொல்லிமலை மற்றும் துறையூர் செல்லும் சாலை என, அம்பு குறியிட்டுள்ளது.

அதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், அந்த சாலையில் சென்று, சாலைப்பணி நிறைவு பெறாததால் மீண்டும் திரும்பி வரும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 2:00 மணிக்கு குஜராத்தில் இருந்து, சோலார் பேனல்களை ஏற்றி வந்த லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்றது. அதை, பவன்குமார், 52, என்ற டிரைவர் ஓட்டினார்.

அவர், அங்கிருந்த பெயர் பலகை பார்த்து வந்ததால், சாலைப்பணி முடியாத இடத்தில் உள்ள, நான்கு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, டிரைவர் உயிர் தப்பினார். நல்லிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us