பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
ADDED : பிப் 28, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
சேலம்:ஆத்துார் அருகே உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு மாணவிக்கு, பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, 3 மாணவர்களையும் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தை மறைத்ததாக, தலைமை ஆசிரியர் முத்துராமன், உதவி தலைமை ஆசிரியை பானுப்ரியா, ஆசிரியர் ராஜேந்திரன் மீது துறை நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பரிந்துரைத்தார். அதன்படி முத்துராமன், பானுப்பிரியா கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டனர். இந்நிலையில் ராஜேந்திரன் மீது, '17பி' விதிமுறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
