/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் தின விழா போட்டி: கோலம் வரைந்து அசத்தல்
/
மகளிர் தின விழா போட்டி: கோலம் வரைந்து அசத்தல்
ADDED : மார் 02, 2025 01:25 AM
மகளிர் தின விழா போட்டி: கோலம் வரைந்து அசத்தல்
சேலம்:உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோலம், அடுப்பில்லா சமையல் போட்டிகள் நேற்று நடந்தன. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தொடங்கி வைத்தார்.
வருவாய்த்துறையை சேர்ந்த பெண்கள், ரங்கோலி, புள்ளி கோலங்களை வரைந்தனர். குழுவுக்கு, 3 பேர் வீதம், 21 பேர், ஏழு கோலங்கள் வரைந்தனர். சங்க நிர்வாகிகள், முருகபூபதி, அகிலன், கோபாலகிருஷ்ணன், ஜாகிதாபேகம் நடுவர்களாக செயல்பட்டனர். அதேபோல் சிறுதானியம், பச்சை காய்கறியால், அடுப்பில்லா சமையல் செய்து ருசி பார்க்கப்பட்டது.
கோலப்போட்டியில் முத்துமாரி, செல்வி, மகேஸ்வரி, அறிவுகண்ணு, வெண்ணிலா முதலிடம், சுமதி, சங்கீதா, மகாலட்சுமி, தமிழ்செல்வி, சத்யா, மைதிலி, 2ம் இடம், ரமா, கிருஷ்ணவேணி, அனுசுயா, அமுதா, எல்லம்மாள், சண்முகபிரியா, வளர்மதி, நிர்மலா, உமாமகேஸ்வரி, 3ம் இடம் பிடித்தனர். இவர்களே சமையல் போட்டியிலும், முதல், 3 இடங்களில் மாறி மாறி வென்றனர்.
ஏற்கனவே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிர் தின விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.