/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சார் - பதிவாளரை மிரட்டியபத்திர எழுத்தர் கைது
/
சார் - பதிவாளரை மிரட்டியபத்திர எழுத்தர் கைது
ADDED : மார் 02, 2025 01:28 AM
சார் - பதிவாளரை மிரட்டியபத்திர எழுத்தர் கைது
மேட்டூர்:மேச்சேரி பத்திரப்பதிவு அலுவலக சார் - பதிவாளர் ேஹமலதா, 33. அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் எழுத்தராக இருப்பவர், மல்லிகுந்தத்தை சேர்ந்த கோபி, 31. வக்கீலுக்கு படித்துள்ள இவர், சட்டத்துக்கு புறம்பான நிலங்களை பதிவு செய்ய, ேஹமலதாவை வற்புறுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2024 டிச., 24, 26, 2025ல் ஜன., 13 ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு செய்ய தலா, 100 டோக்கன் பதிவு செய்த நிலையில் குறைந்த பயனாளர்களே பத்திரம் பதிவு செய்தனர். இதுகுறித்து சார் - பதிவாளர் அலுவலக உயரதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கோபி பெரும்பாலான டோக்கன்களை வாங்கி, பத்திரப்பதிவு செய்யாமல் இருந்தது தெரிந்தது. இந்நிலையில் கடந்த ஜன., 30 காலை, 10:00 மணிக்கு, பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற கோபி, 'நான் கொண்டு வரும் பத்திரங்களை ஏன் பதிவு செய்ய முடியாது' என, ேஹமலதாவிடம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், 'வக்கீல் என்பதால் போலீசில் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது' எனக்கூறி மிரட்டல் விடுத்தார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான ேஹமலதா, நேற்று முன்தினம் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், அரசு அதிகாரியை பணிபுரிய விடாமல் தடுத்து மிரட்டியதாக, கோபியை நேற்று கைது செய்தனர்.