/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு'குரோனிகள்ஸ் ஆப் இந்தியா' அங்கீகாரம்

ADDED : மார் 06, 2025 01:30 AM
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு'குரோனிகள்ஸ் ஆப் இந்தியா' அங்கீகாரம்
சேலம்:சேலம் விநாயகா மிஷனின், அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு, குரோனிகள்ஸ் ஆப் இந்தியா எனும் தனியார் அமைப்பு மூலம், சிறந்த கல்லுாரி தரவரிசை பட்டியலில், 'ஏ௨' பிரிவில் இடம்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால், டீன் செந்தில்குமாரை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.
இதுகுறித்து, டீன் செந்தில்குமார் கூறியதாவது: இந்த ஆண்டு, 'தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கல்வி தரவரிசை 2025' தலைப்பில், சமீபத்தில் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் எங்கள் கல்லுாரி, 'ஏ௨' பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் கல்வியல் சார்ந்த புதுமை நடவடிக்கைகளை மையப்படுத்தி, குறிப்பாக கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களின் திறனை வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேம்படுத்துவது; அவர்களின் படைப்பாற்றல் திறனை தொழில்நுட்ப அறிவுடன் இணைப்பது; சமூகத்தின் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.