/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கட்டடத்தில் தி.மு.க., விளம்பரம்நகராட்சி ஆபீசை முற்றுகையிட்ட பா.ஜ.,

ADDED : மார் 06, 2025 01:31 AM
அரசு கட்டடத்தில் தி.மு.க., விளம்பரம்நகராட்சி ஆபீசை முற்றுகையிட்ட பா.ஜ.,
மகுடஞ்சாவடி:இடங்கணசாலை நகராட்சிக்கு சொந்தமான, காடையாம்பட்டி வணிக வளாகம், வாரச்சந்தை கட்டட சுவரில், 10 அடி உயரம், 25 அடி அகலத்தில், தி.மு.க.,வினர், சில மாதங்களுக்கு முன் கட்சி பிரமுகர்களின் படங்கள், பெயர்களை எழுதினர். இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனக்கூறி, இடங்கணசாலை நகர பா.ஜ., சார்பில், நகர மண்டல தலைவர் கலைச்செல்வி தலைமையில் கட்சியினர், நேற்று காலை, 11:30 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின் கமிஷனர் பவித்ராவிடம் அளித்த மனு:அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளதா? அப்படி இல்லாத பட்சத்தில் காடையாம்பட்டி சந்தை பகுதியில் உள்ள வணிக வளாகம், சந்தை சுவரில் எழுதியுள்ள கட்சி விளம்பரம், படங்களை அழித்து வெள்ளை அடித்து தர வேண்டும். மேலும் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, நகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அழித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இல்லை எனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.