/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீசன் பொருட்கள் வாங்க வரும் மக்கள்பால் மார்க்கெட்டில் நெரிசலால் அவதி

ADDED : மார் 18, 2025 01:55 AM
சீசன் பொருட்கள் வாங்க வரும் மக்கள்பால் மார்க்கெட்டில் நெரிசலால் அவதி
சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பஸ் ஸ்டாப், லாங்லி ரோடு சந்திப்பில், 100க்கும் மேற்பட்ட மொத்த மளிகை கடைகள் உள்ளன. இவற்றில் சேலம் மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்து சில்லரை மளிகை கடைக்காரர்கள், மக்கள் பொருட்களை வாங்குகின்றனர். மேலும் ஆண்டுக்கு தேவையான மிளகு, சீரகம், கடுகு, பூண்டு, புளி உள்ளிட்ட சீசன் பொருட்கள் மட்டுமன்றி அனைத்து மளிகை பொருட்களையும் பிப்ரவரி இறுதியில் இருந்து, ஏப்ரல் இறுதி வரை வாங்கி செல்ல, கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.
ஏற்கனவே பால் மார்க்கெட் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக லாங்லி ரோடு வளைவு சந்திப்பில், ஒரே நேரத்தில் எதிரெதிரே இரு பஸ்கள் நிறுத்தி பயணியரை ஏற்றி இறக்கினால் குறைந்தபட்சம், 10 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சில நேரங்களில் வெளியூரில் இருந்து வருவோர், சாலையோரம், 4 சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசாரை, இரு மாதங்களுக்கு நிற்க வைத்து, நெரிசல் ஏற்படாதபடி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் வலியுறுத்தினர்.