/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில்உயிரியல் பூங்காவுக்கு நன்கொடை வழங்கல்

ADDED : மார் 20, 2025 01:20 AM
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில்உயிரியல் பூங்காவுக்கு நன்கொடை வழங்கல்
சேலம்:சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், உலக வனவிலங்கு தினம் சார்ந்த விழிப்புணர்வு வரைபடம் வரைவதற்கான தொடக்க நிகழ்வு, பார்வையாளர் மேம்பாட்டுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நடந்தது.
கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் செல்வகுமார், விழிப்புணர்வு வரைபட நிகழ்வை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பூங்கா, பார்வையாளர் மேம்பாட்டுக்கு, டீன் மூலம் உதவி வன பாதுகாவலரிடம் நன்கொடை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர் ஸ்ரீவித்யா செய்திருந்தனர்.