தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டிஇன்று, நாளை பரிசு வழங்குகிறார் அமைச்சர்

முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டிஇன்று, நாளை பரிசு வழங்குகிறார் அமைச்சர்

முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டிஇன்று, நாளை பரிசு வழங்குகிறார் அமைச்சர்


ADDED : ஏப் 05, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டிஇன்று, நாளை பரிசு வழங்குகிறார் அமைச்சர்

சேலம்:தி.மு.க.,வின் சேலம் மாநகர் செயலர் ரகுபதி அறிக்கை:முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஏப்., 5ல்(இன்று) பரிசளிப்பு விழா நடக்கிறது. அமைச்சர் ராஜேந்திரன், பரிசு வழங்கி வீரர்களை கவுரவிக்கிறார்.

அதன்படி காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு, பேரூர், ஓமலுார் வடக்கு, கிழக்கு, பேரூர், தாரமங்கலம் கிழக்கு பகுதிகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஓமலுார் எம்.ஆர்.பி., மண்டபத்தில், காலை, 10:00 மணிக்கு பரிசு வழங்குகிறார்.

ஓமலுார் தெற்கு, சேலம் வடக்கு ஒன்றியம், சூரமங்கலம், மெய்யனுார், அழகாபுரம் பகுதிகளில் வென்றவர்களுக்கு, சித்தனுார் ஸ்டீல் பிளான்ட் சாலை, எஸ்.பி.எம்., மண்டபத்தில், மதியம், 12:00 மணிக்கும், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, குகை, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டையில் வென்றவர்களுக்கு, அம்மாபேட்டை கொங்கு மண்டபத்தில், மதியம், 3:00 மணிக்கும் பரிசளிப்பு விழா

நடக்கிறது. ஏப்., 6(நாளை) காலை, 9:30 மணிக்கு, தொங்கும் பூங்காவில் நடக்கும் விழாவில், அஸ்தம்பட்டி, பொன்னம்மாப்பேட்டை, அரிசிபாளையம், செவ்வாய்ப்பேட்டை, குமாரசாமிப்பட்டி, கன்னங்குறிச்சி பேரூர் பகுதிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் சேலம் மத்திய மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணியினர் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us