தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வக்ப் வாரிய சட்ட திருத்த விவகாரம்காங்., கண்டனம்; இன்று ஆர்ப்பாட்டம்

வக்ப் வாரிய சட்ட திருத்த விவகாரம்காங்., கண்டனம்; இன்று ஆர்ப்பாட்டம்

வக்ப் வாரிய சட்ட திருத்த விவகாரம்காங்., கண்டனம்; இன்று ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 06, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வக்ப் வாரிய சட்ட திருத்த விவகாரம்காங்., கண்டனம்; இன்று ஆர்ப்பாட்டம்

சேலம்:சேலம் மாநகர் காங்., அவசர ஆலோசனை கூட்டம், முள்ளுவாடி கேட் அருகே உள்ள அதன் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அதில், மத்திய பா.ஜ., அரசு, இஸ்லாமியர்

களுக்கு எதிராக வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று காலை, 10:30 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் கருப்பு கொடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநகர் பொதுச்செயலர் கோபிகுமரன், வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர்கள் மொட்டையாண்டி, ரகுநாத், மண்டல தலைவர் சாந்தமூர்த்தி பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்ஆத்துார் ரயில்வே ஸ்டேஷன் முன், மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நடந்தது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ரஹிமான் தலைமை வகித்தார். வக்ப் வாரிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பினர். கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், ம.தி.மு.க.,வின் மாவட்ட செயலர் கோபால்ராசு, காங்., - வி.சி., கட்சி

யினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us