/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு கடன் சங்கம் மூலம்நெல் விதை விற்க கள ஆய்
/
கூட்டுறவு கடன் சங்கம் மூலம்நெல் விதை விற்க கள ஆய்
ADDED : ஏப் 11, 2025 01:16 AM
கூட்டுறவு கடன் சங்கம் மூலம்நெல் விதை விற்க கள ஆய்வு
ஓமலுார்:சேலம் மாவட்டத்தில் டேனிஷ்பேட்டை மற்றும் மேட்டூரில், அரசு விதைப்பண்ணைகள் உள்ளன. அங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகளை, மாவட்டம் முழுதும் உள்ள, 20 வட்டார வேளாண் அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வட்டாரத்தில், தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள், வேளாண் அலுவலகம் வந்து, விதை நெல் வாங்குவதை தவிர்க்க, கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விதைகள் வழங்கப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் டேனிஷ்பேட்டை பண்ணையில் இருந்து கூட்டுறவு கடன் சங்கங்கள் எவ்வளவு துாரம் உள்ளன, அப்பகுதி விவசாயிகளுக்கு எந்த வகை நெல் ரக விதைகள் தேவை, சாகுபடி பரப்பு எவ்வளவு, விதை நெல் வைக்க போதி இட வசதி உள்ளதா என, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் மூலம், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு பணி நடந்து வருவதாகவும், இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

