தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்

மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்

மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்


ADDED : மார் 09, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்கசிவால் கூரை வீட்டில் தீ விபத்துபணம் உள்பட ரூ.6 லட்சத்துக்கு சேதம்

தலைவாசல்:தலைவாசல் அருகே தியாகனுார் ஊராட்சி தெற்கு தியாகனுாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 50. இவரது மனைவி நாகம்மாள், 45. மரம் ஏறும் தொழிலாளியான இவர்கள், நேற்று மாலை, 6:00 மணிக்கு கூரை வீட்டில் இருந்தனர். அப்போது, மின்கசிவால் தீப்பற்றியது.

இதுகுறித்து, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு, மாலை, 6:05க்கு தகவல் அளித்தனர். 6:30க்கு அங்கு வந்த வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

ஆனால் வீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கட்ட வைத்திருந்த, 1.35 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 6.5 பவுன் நகை, 'டிவி', மிக்சி, கிரைண்டர், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட, மொத்தம், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாகின.

தவிர வீடு அருகே நிறுத்தியிருந்த செந்தில் என்பவரது கன்டெய்னர் லாரியின் ஒரு பகுதி சேதமடைந்தது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us