/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செல்ல பிராணிகளுக்கு கருத்தடைஅறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம்
/
செல்ல பிராணிகளுக்கு கருத்தடைஅறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம்
செல்ல பிராணிகளுக்கு கருத்தடைஅறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம்
செல்ல பிராணிகளுக்கு கருத்தடைஅறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம்
ADDED : ஜன 25, 2025 01:10 AM
செல்ல பிராணிகளுக்கு கருத்தடைஅறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம்
தலைவாசல், :தலைவாசல் கால்நடை மருத்துவ கல்லுாரியில், செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம் நடந்தது.
தலைவாசல் அருகே, வி.கூட்ரோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நேற்று செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பயிலரங்கு கூட்டம் நடந்தது. இதில், மேற்குவங்காளம், கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, செல்லப்பிராணிகளுக்கு, ஆண்மை நீக்கம் அறுவை சிகிச்சை, சூலகம் மற்றும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை, மயக்க மருந்து செலுத்தும் நெறி
முறைகள், தையல் தொழில்நுட்பங்கள் குறித்து, கல்லுாரி முதல்வர் இளங்கோ எடுத்துரைத்தார்.தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சிகிச்சை பிரிவு இயக்குனர் அனில்குமார், பயிலரங்கின் கையேட்டினை வெளியிட்டார். இதில், கால்நடை சிகிச்சை வளாக இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரத், துறை பேராசிரியர்கள், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.