/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்
/
கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்
கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்
கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்
ADDED : பிப் 02, 2025 01:35 AM
கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்
வீரபாண்டி : சேலம் மாவட்டம் சீரகாபாடி அருகே மதுரையான்காட்டில் வசித்த சின்னத்தாயி, 88, கடந்த ஜன., 26ல் கொலை செய்யப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவரான, 17 வயது சிறுவன், கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது.
அவனை, ஜன., 30ல் கைது செய்த போலீசார், தடயங்களை மறைத்த அவரது தாயையும் கைது செய்தனர். விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை, அருகே உள்ள தெரு பாறை குட்டையில் வீசியதாக சிறுவன் தெரிவித்தான். இதனால் ஆட்டையாம்பட்டி போலீசார் குட்டையில் தேடினர்.
அதில், தண்ணீர் நிறைந்து சேறு, சகதியாக இருந்ததால், ஆட்டையாம்பட்டி தீயணைப்புத்துறை உதவியை நாடினர். இதனால் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள், நேற்று முன்தினம் குட்டையில் காந்தங்களை கொண்டும், மூழ்கியும், 3 மணி நேரம் தேடி, கத்தியை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.