/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் மனைவி பலி கணவர் படுகாயம்
/
விபத்தில் மனைவி பலி கணவர் படுகாயம்
ADDED : பிப் 05, 2025 01:30 AM
விபத்தில் மனைவி பலி கணவர் படுகாயம்
சங்ககிரி: சங்ககிரி, ஆலத்துார் அருகே வரநல்லாம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந் திரன், 50. இவரது மனைவி பூங்கொடி, 40. இருவரும் நேற்று, 'அக்சஸ்' மொபட்டில் சங்ககிரியில் இருந்து குமாரபாளையம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் ராஜேந்திரன் ஓட்டி னார். மாலை, 4:00 மணிக்கு வீராச்சிப்பாளையம் அருகே சென்றபோது, கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த முகமத் அப்துல் வாகித், 24, வேகமாக ஓட்டி வந்து மொபட் மீது மோதினார். இதில் பூங்கொடி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.