sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோகுலம் மருத்துவமனை ஐ.சி.யு., மேலாண் இயக்குனர் விளக்கம்

/

கோகுலம் மருத்துவமனை ஐ.சி.யு., மேலாண் இயக்குனர் விளக்கம்

கோகுலம் மருத்துவமனை ஐ.சி.யு., மேலாண் இயக்குனர் விளக்கம்

கோகுலம் மருத்துவமனை ஐ.சி.யு., மேலாண் இயக்குனர் விளக்கம்


ADDED : பிப் 20, 2025 01:41 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோகுலம் மருத்துவமனை ஐ.சி.யு., மேலாண் இயக்குனர் விளக்கம்

சேலம்:சேலம், மெய்யனுார் சாலையில் உள்ள, ஸ்ரீகோகுலம் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவு குறித்து, அதன் மேலாண் இயக்குனர் அர்த்தநாரி அறிக்கை:

தீவிர சிகிச்சை பிரிவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ பிரிவு. இங்கு அனுபவமிக்க பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், சுவாச சிகிச்சையாளர்கள், பணியாளர்கள், 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றனர்.

மூளை சம்பந்தப்பட்ட வியாதி, இருதய, நுரையீரல் செயலிழப்புகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள், கடும் தொற்று வியாதிகள், பெரிய அளவில் விபத்து காயங்கள், அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிக்கல், நச்சு பாதிப்பு, சர்க்கரை வியாதியால் ஏற்படும் உறுப்பு செயலிழப்பு போன்ற நோயாளி களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதே, இந்த பிரிவின் முதன்மை நோக்கம். மேம்பட்ட தொழில்நுட்பம், கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகளுக்கு உயரிய பராமரிப்பு வழங்க முடியும்.

சிறப்பம்சமாக, இருதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்கும் கருவிகள், செயற்கை சுவாச கருவிகள், ரத்த சுத்திகரிப்பு, பேஸ்மேக்கர் வசதிகள், எக்கோ, ஐ.ஏ.பி.பி., உள்ளிட்ட

கருவிகள், அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவ குழு உள்ளன. இங்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம், நோயாளிகள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகின்றன. தொடர்புக்கு, 0427 - 2555000 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி சிதைத்த ஆட்டோ டிரைவர்மகன், மூத்த மகள் பலி; மனைவி, இளைய மகளும் கவலைக்கிடம்

ஆத்துார்:ஆட்டோ டிரைவரின் கள்ளத்தொடர்பு குறித்து மனைவி தட்டிக்கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டிரைவர், அரிவாளால், மனைவி, மகன், இரு மகள்களை, கண்மூடித்தனமாக வெட்டி சிதைத்தார். இதில் மகன், மூத்த மகள் உயிரிழந்த நிலையில், மனைவி, இளைய மகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 45; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தவமணி, 38. இவர்களது மகள்கள் விஜயதாரணி, 13, அருள்பிரகாஷினி, 10, மகன் அருள்

பிரகாஷ், 6. இவர்கள் முறையே, 8, 5, 1ம் வகுப்பு படித்தனர்.அசோக்குமார், கடலுார் மாவட்டம் நெய்வேலியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த, 17ல், சொந்த ஊர் வந்தபோது மனமுடைந்து காணப்பட்டார். விஷம் குடித்து தற்கொலை செய்வதாக கூறிய நிலையில், மனைவி, உறவினர்கள் தடுத்துள்ளனர். அதே நாள் நெய்வேலி சென்ற அவர், நேற்று முன்தினம் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். அப்போது நெய்வேலியில் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளது குறித்து, கணவரிடம் மனைவி கேட்டுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த மனைவி, மகன், மகள்களை மர்ம நபர்கள் வெட்டிச்சென்றதாக, ரத்த காயங்களுடன் வந்து, அசோக்குமார், அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். உறவினர்கள், மக்கள், அவரது வீட்டில் சென்று பார்த்தபோது, விஜயதாரணி, அருள்பிரகாஷ் இறந்து கிடந்தனர். தவமணி, அருள்பிரகாஷினி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இருவரையும் மக்கள் மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பப்பட்டனர்.

அதேநேரம் வீடு அருகே தோட்டத்தில் லேசான காயத்துடன் கிடந்த அசோக்குமாரை, கெங்கவல்லி போலீசார் மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்தபோது, 'சொத்து பிரச்னை உள்ளது. இந்நிலையில் மனைவி, குழந்தைகளை மர்ம நபர்கள் வெட்டிச்சென்றனர். எனக்கு மயக்கமாக உள்ளது' என கூறினார். இவரது பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில் போலீசார், காலை, 9:30 மணிக்கு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். 'லில்லி' மோப்ப நாய், வீடு அருகே சிறிது துாரம் ஓடி நின்றது. தொடர்ந்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் ஆத்துார், தலைவாசல், வீரகனுார், தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அசோக்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில் மனைவி, குழந்தைகளை அரிவாளால் வெட்டியதை, அவரே ஒப்புக்கொண்டார். கெங்கவல்லி போலீசார், கொலை வழக்கு பதிந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

அசோக்குமார், நெய்வேலியில் திருமணமான, 45 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அறிந்து அப்பெண்ணின் தம்பி கண்டித்துள்ளார். சில நாட்களுக்கு முன், நெய்வேலி என்.எல்.சி., சுற்றுச்சுவரில் இருந்த இரும்பு கதவை, அசோக்குமார் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அதை, தொடர்பு வைத்துள்ள பெண்ணின் தம்பி வீடியோ எடுத்துக்கொண்டு, திருடியதாக போலீசில் புகார் அளித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த, 17ல் சொந்த ஊர் வந்த அசோக்குமார், அவரது அண்ணன் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். அவர், மிரட்டிய நபரிடம் பேசியுள்ளார். அப்போது அவரது அக்காவுடன், 'அசோக்குமார் பேசமாட்டார்' என கூறியுள்ளார். பின் நெய்வேலி சென்று திரும்பிய நிலையில், திருட்டு பிரச்னையுடன் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்து மனைவி கண்டித்துள்ளார்.

இதனால் அதிக அளவில் மது அருந்திய அசோக்குமார், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து அதிகாலையில் துாங்கிக்கொண்டிருந்த மனைவி, குழந்தைகளை, கண்மூடித்தனமாக கொடூர முறையில் வெட்டியுள்ளார். கொலையை மறைக்க, மர்ம நபர்கள் வெட்டியதாக நாடகமாடியுள்ளார். விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சிகிச்சைக்கு பின், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us