/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீக்கிய பெண்ணை சேர்க்கக்கூடாது ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்
/
நீக்கிய பெண்ணை சேர்க்கக்கூடாது ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நீக்கிய பெண்ணை சேர்க்கக்கூடாது ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நீக்கிய பெண்ணை சேர்க்கக்கூடாது ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ADDED : பிப் 22, 2025 01:32 AM
நீக்கிய பெண்ணை சேர்க்கக்கூடாது
ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மேட்டூர்: மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கியூ.பி.எம்.எஸ்., ஒப்பந்த நிறுவனத்தில், சுழற்சி முறையில், 55 பேர் பணிபுரிகின்றனர். அங்கு ஏற்கனவே சுகாதார பணியாளராக பணிபுரிந்த நாகம்மாள், தொழிற்சங்கத்தில் இதர ஊழியர்களை சேர வற்புறுத்தியதாக புகார் எழுந்தது.
இதனால் கடந்த ஆண்டு மார்ச், 25ல் நாகம்மாளை இடமாற்றக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாகம்மாள் நீக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் நாகம்மாளை, மேட்டூர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்க்க ஒப்பந்த நிறுவனம், நேற்று காலை மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசியிடம் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த பணியாளர்கள், நேற்று காலை, 8:00 முதல், 10:00 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த நிறுவன மண்டல மேலாளர் ஆதிநாராயணன், பேச்சு நடத்தி, நாகம்மாள் பணியில் சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதையடுத்து, பணியாளர்கள் பணிக்கு
திரும்பினர்.