/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பெண் கல்வியை மேம்படுத்துவதில்மருத்துவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்'

ADDED : மார் 09, 2025 01:55 AM
'பெண் கல்வியை மேம்படுத்துவதில்மருத்துவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்'
சேலம்:சேலத்தில் சர்வதேச மகளிர் தின ஊர்வலம் நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலம் கிளை இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், 5 ரோடு, சாரதா கல்லுாரி சாலை வழியே சென்று மீண்டும், சங்க வளாகத்தை அடைந்தது. இதில் அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், செவிலிய மாணவியர் பங்கேற்றனர்.
முன்னதாக செங்குட்டுவன் பேசுகையில், ''பெண்கள் அனைத்து துறைகளிலும் உன்னத நிலையை அடைகிறார்கள். பெண்கல்வியை மேம்படுத்துவதில் மருத்துவர்களாகிய நாம் உறுதியாக இருக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து தேசிய முன்னாள் தலைவர் பிரகாசம் பேசுகையில், ''நாடு சுதந்திரம் அடையும் முன், புரட்சி கவிஞர் பாரதி, பெண் கல்வி மட்டுமே ஒரு ஆரோக்கிய, சமூக மாற்றத்துக்கு ஒரு வலுவான குரல் என்பதை நினைவுகூர்ந்து, ஆண்களுக்கு பெண்கள் சமமானவர்கள் என்பதை எடுத்துரைத்தார்,'' என்றார்.
பயிற்சி கலெக்டர் ஆக்ரிதி, சங்க சேலம் கிளை தலைவர் மோகனசுந்தரம், கவுரவ செயலர் விஷ்ணுபிரசாத், பொது மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு கிளை தலைவர் பாலமுருகன், கவுரவ செயலர் அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய மருத்துவ சங்கம், சிம்ஸ் செல்லம், கோகுலம், எஸ்.கே.எஸ்., மருத்துவமனைகள், பொது மருத்துவர் சங்கம், டாக்டர் சிரிஞ்ச் மெட்வெர்ஸ், ஜே.சி.ஐ., ஜூவல் ஒன், ஜி.ஆர்.டி., கேட்டரிங், ஸ்விட்ஸ் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.