/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
/
மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
ADDED : மார் 10, 2025 01:28 AM
மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
பனமரத்துப்பட்டிபனமரத்துப்பட்டியில், மாசி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயம் சார்பில், சக்தி விநாயாகர் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் தொடங்கி, மாரியம்மன் கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவில் சுவாமி மெரமனை நடந்தது. மலர் அலங்காரத்தில் அம்மன், முக்கிய வீதிகள் வழியே சென்று, கோவிலை அடைந்தது. அதற்கு முன்பாக, காவடி ஆட்டம், சிலம்பாட்டம் நடந்தது.
அதேபோல் ஆத்துார் அருகே புதுகொத்தாம்பாடியில், சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், சக்தி செல்லியம்மன் கோவில் உள்ளது. அங்கு வரும், 12ல் சக்தி மாரியம்மன் தேர் திருவிழா, 13ல் சக்தி செல்லியம்மன் தேர் திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று, மாரியம்மன் சுவாமிக்கு பால் குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, மாரியம்மன் சிலை மீது ஊற்றி அபிேஷகம் செய்தனர்.

