/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண்டல அஞ்சல் குறைதீர் கூட்டம் 16க்குள் புகாரை அனுப்பி வையுங்க!
/
மண்டல அஞ்சல் குறைதீர் கூட்டம் 16க்குள் புகாரை அனுப்பி வையுங்க!
மண்டல அஞ்சல் குறைதீர் கூட்டம் 16க்குள் புகாரை அனுப்பி வையுங்க!
மண்டல அஞ்சல் குறைதீர் கூட்டம் 16க்குள் புகாரை அனுப்பி வையுங்க!
ADDED : செப் 10, 2024 06:54 AM
சேலம்: கோவை அஞ்சல்துறை தலைவர் தலைமையில், மண்டல அள-விலான மக்கள் குறைதீர் கூட்டம், கோவையில் உள்ள கே.பி. காலனி அஞ்சலக கட்டடத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எனவே, அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின், அதை வரும், 16க்குள், அஞ்சல்-துறை தலைவர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை 641030 என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் உறையின்
மீது, 'டாக் அதாலத் வழக்கு' என குறிப்பிட வேண்டும்.மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு பற்றிய புகார் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலக பெயர் என அனைத்தும் குறிப்பி-டப்பட வேண்டும். சேமிப்பு வங்கி
அல்லது அஞ்சல் காப்பீடு பற்-றிய புகார் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகை-யாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரம் மற்றும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் அதையும் தெரியப்படுத்த வேண்டும். இந்த
தகவலை சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.