sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீஸ் கண்காணிப்பில் ஆறு கொலை நடந்த வீடு

/

போலீஸ் கண்காணிப்பில் ஆறு கொலை நடந்த வீடு

போலீஸ் கண்காணிப்பில் ஆறு கொலை நடந்த வீடு

போலீஸ் கண்காணிப்பில் ஆறு கொலை நடந்த வீடு


ADDED : ஜூலை 14, 2011 01:36 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: தாசநாயகன்பட்டியில், ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வீடு மற்றும் வயல் பகுதியில் நடமாடுபவர்களை, போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

சேலம், தாசநாயகன்பட்டி சவுடாம்பிகா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உட்பட ஆறுபேர், 2010 ஆகஸ்ட் 12ம் தேதி, வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், கொலை நடந்த வீட்டை அங்கும் அங்குலமாக சோதனை செய்து, அங்கு கிடைத்த தடயங்களை கைப்பற்றி உள்ளனர். அந்த வீடு போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், குப்புராஜுக்கு சொந்தமான வயல் திடீரென தீப்பற்றி எரிந்தது. வீடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் உதிரி பாகங்கள் மாயமானது. கடந்த 10ம் தேதி, குப்புராஜ், சந்தானலட்சுமி, கவுதம் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டு கிடந்த அறை, மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. வீட்டு சோதனையிட்ட போலீஸார், வராண்டாவில் இருந்த கால் தடத்தை கண்டுபிடித்து பதிவு செய்துள்ளனர். கொலை நடந்த வீடு மற்றும் வயல் பகுதியில் அடுத்து, அடுத்து அசாம்பாவிதம் ஏற்படுவதால், மர்ம ஆசாமிகள் நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், போலீஸார் மறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர். மேலும், குப்புராஜ் வீடு, வயல் பகுதிக்கு வரும் நபர்கள் குறித்து தகவல் தரும்படி, இன்பார்மர்களை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us