ADDED : ஏப் 29, 2024 07:05 AM
அ நிறம் | அளவு
தலைவாசல் : தலைவாசல் அருகே வடகுமரையை சேர்ந்த, 17 வயது சிறுவன், உறவினர் மூலம் வேப்பநத்தம், பொன்னொளி நகரை சேர்ந்த மூர்த்தியின் நெல் அறுவடை இயந்திர டிரைவராக சேர்ந்தார்.
ஆனால் சம்பளம் வழங்காததால், மற்றொரு இடத்தில் வேலைக்கு சென்றார். இதனால் சம்பளம் தருவதாக கூறி, அச்சிறுவனை, மூர்த்தி கருமந்துறை, ராசிபுரத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு மூர்த்தி, சிறுவனை தாக்கி பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றார். வீட்டுக்கு வந்த சிறுவன், பெற்றோரிடம் கூறியுள்ளார். பின் சிறுவனை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
