/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்சூரன்ஸ் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
இன்சூரன்ஸ் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 05, 2024 03:08 AM
சேலம்: சேலத்தில் எல்.ஐ.சி., சார்பில், 68வது இன்சூரன்ஸ் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கோட்ட முதுநிலை மேலாளர் அனந்த்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோட்டை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலகம், குமாரசாமிப்பட்டி வழியே ஜான்சன்பேட்டையில் உள்ள கோட்ட எஸ்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அனந்தகுமார் பேசுகையில், ''ஒவ்வொரு மனிதனும், வருவாய்க்கு ஏற்ப, இன்சூரன்ஸ் திட்டத்தில் சேமித்து வாழ்க்கைக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
ஊர்வலத்தின் போது, எல்.ஐ.சி.,யின் பல்வேறு திட்டங்கள், சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச்சென்றனர். இதில் ஊழியர்கள், முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.