தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரத்தை வெட்டியதால் மாணவர்கள் அவதி

மரத்தை வெட்டியதால் மாணவர்கள் அவதி

மரத்தை வெட்டியதால் மாணவர்கள் அவதி


ADDED : நவ 23, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீரபாண்டி, நவ. 23-

சேலம், உத்தமசோழபுரத்தில் உள்ள வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

அங்குள்ள ஒரு வகுப்பறை கட்டடம் முன் புங்க மரம் இருந்ததால், சில நேரங்களில் திறந்தவெளியில் மரத்தடி நிழலில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள், மரத்தடி நிழலில் அமர்ந்து சாப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில் பள்ளி முன் உள்ள கோவில் தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு நாட்களுக்கு முன், புங்க மரத்தை வெட்டி சாய்த்துள்ளனர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வெட்டிய மரத்தை அப்படியே போட்டுள்ளனர். இதனால் வகுப்பறை முன், வெட்டப்பட்ட மரம் அகற்றப்படாமல் கிடப்பதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us