/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் ஊழியர் கொலைவழக்கில் இருவர் கைது
/
பெண் ஊழியர் கொலைவழக்கில் இருவர் கைது
ADDED : ஜன 05, 2025 01:56 AM
ஊத்தங்கரை, :ஊத்தங்கரை அருகே, தனியார் நிறுவன பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை அடுத்த, கஞ்சனுாரை சேர்ந்தவர் தீபா, 29. நேற்று முன்தினம் இரவு, 9:50 மணியளவில் வேலை முடித்து விட்டு, டி.வி.எஸ்., மொபட்டில் வீடு திரும்பும் போது, -அவரை பின் தொடர்ந்த கம்பைநல்லுார் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மிதுன், 30, அவரது நண்பர் கவியரசு, 25, ஆகிய இருவரும் தீபாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்து, சாமல்பட்டி போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்து, விசாரணைக்காக ஊத்தங்கரைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.