ADDED : ஜன 17, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
வீரபாண்டி,:ஆட்டையாம்பட்டி, ரத்தினவேல் கவுண்டர் காட்டை சேர்ந்தவர் கோபால், 38. தறித்தொழிலாளியான இவர், மனைவி, குழந்தையை பிரிந்து தனியே வசித்தார். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு சீரகாபாடியில், சேலம் - கோவை நான்கு வழிச்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து பவானி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில், கோபால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பஸ் டிரைவரான, ராசிபுரம், முத்துகாளிப்பட்டியை சேர்ந்த சேகர், 55, என்பவரிடம், ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.