தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்பு

வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்பு

வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்பு


ADDED : ஜன 18, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வசிஷ்ட நதி ஓடையில் விவசாயி சடலம் மீட்பு

பெத்தநாயக்கன்பாளையம்,:பெத்தநாயக்கன்பாளையம், பஞ்சமர் தெரு அருகே பனையேரிக்கு செல்லும் வசிஷ்ட நதி ஓடையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு முதியவர் சடலம் மிதந்தது. மக்கள் தகவல்படி, ஏத்தாப்பூர் போலீசார், உடலை மீட்டு விசாரித்ததில், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியதம்பி, 63, என தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:நேற்று முன்தினம் இரவு, வசிஷ்ட நதி ஓடையை கடக்க, பனை மரத்தில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக பாலத்தை, 'எக்ஸல்' மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது தடுமாறி, மொபட்டுடன் ஓடையில் விழுந்து பெரிய தம்பி காயம் அடைந்துள்ளார். பின் தண்ணீரில் சிறிது துாரம் அடித்துச்செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. சந்தேக மரண வழக்கு பதிந்து விசாரிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us