/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி சக்கரத்தில் சிக்கிஅச்சக ஊழியர் பலி
/
லாரி சக்கரத்தில் சிக்கிஅச்சக ஊழியர் பலி
ADDED : ஜன 18, 2025 01:54 AM
வாழப்பாடி, :வாழப்பாடி, பேளூரை சேர்ந்தவர் கார்த்திக், 28. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கி, 'சைன்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பட்டி பவர் ஆபீஸ் அருகே சென்றபோது, முன்புறம் சென்ற லாரியை முந்த முயன்றார்.
அப்போது, தலைவாசலில் உள்ள தனியார் அச்சகத்தில் பணிபுரிந்த, பெரம்பலுார் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த சின்னதுரை, 25, ஓட்டிச்சென்ற, 'யமஹா எம்.டி.,' பைக், சைன் பைக் பின்புறம் மோதியது. இதில் கார்த்திக், சின்னதுரை தடுமாறி விழுந்தனர். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கிய சின்னதுரை, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
வாழப்பாடி போலீசார், கார்த்திக்கை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். சின்னதுரை உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.