/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டேங்க் ஆப்பரேட்டர் குறைப்பால் குடிநீர்வினியோகிப்பதில் சிக்கல்
/
டேங்க் ஆப்பரேட்டர் குறைப்பால் குடிநீர்வினியோகிப்பதில் சிக்கல்
டேங்க் ஆப்பரேட்டர் குறைப்பால் குடிநீர்வினியோகிப்பதில் சிக்கல்
டேங்க் ஆப்பரேட்டர் குறைப்பால் குடிநீர்வினியோகிப்பதில் சிக்கல்
ADDED : ஜன 19, 2025 01:39 AM
மகுடஞ்சாவடி, :கன்னந்தேரி ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் குடிநீர் பெற, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சிறு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. கேட்வால்வு திறக்க, 20க்கும் மேற்பட்டோர், டேங்க் ஆப்பரேட்டர்களாக இருந்தனர்.
கடந்த வாரம் முதல், அனைத்து தன்னார்வலர்களும் பணிபுரிய, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டது. இதனால், 5 ஊழியர்கள் மட்டும் கேட்வால்வு திறந்து விடுவதால், அனைத்து பகுதி களுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். டேங்க் ஆப்பரேட்டர்களை, போதிய அளவில் நியமிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.