/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சீஸ்மோகிராப்' பதிவு பரிசோதித்த குழு
/
'சீஸ்மோகிராப்' பதிவு பரிசோதித்த குழு
ADDED : ஜன 23, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சீஸ்மோகிராப்' பதிவு பரிசோதித்த குழு
மேட்டூர்:தமிழக அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட குழுவினர், கண்காணிப்பு பொறியாளர் வீரலட்சுமி தலைமையில் நேற்று, மேட்டூர் அணை இடதுகரை, வலதுகரை பகுதிகளில் உள்ள சீதோஷ்ண நிலை மாறுபாடுகளை பதிவு செய்யும் கருவி, அணை நீர்மட்டத்தை
கண்க ாணிக்கும் கருவிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து நிலநடுக்கங்களை பதிவு செய்யும், 'சீஸ்மோகிராப்' கருவியை ஆய்வு செய்து, அவற்றின் பதிவு சரியாக உள்ளதா என கண்காணித்தனர். அணை ஊழியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர். அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

