/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட போலீஸ் ஏற்பாட்டில் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி
/
மாவட்ட போலீஸ் ஏற்பாட்டில் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி
மாவட்ட போலீஸ் ஏற்பாட்டில் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி
மாவட்ட போலீஸ் ஏற்பாட்டில் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி
ADDED : ஜன 23, 2025 01:24 AM
பனமரத்துப்பட்டி,:சேலம் மாவட்ட போலீஸ் சார்பில், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், 9ம் வகுப்பு வரை உள்ள, 50 மாணவியருக்கு தற்காப்பு விழிப்புணர்வு பயிற்சி, கடந்த, 20ல் தொடங்கியது. தினமும் மதியம், 3:00 முதல், 4:00 மணி வரை, பள்ளியில் பயிற்சி நடக்கிறது. தொடர்ந்து அனைவருக்கும் ஊட்டச்சத்தான சிறு உணவு வழங்கப்படுகிறது.
நேற்று மதியம், சேலம் ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை, ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் உள்ளிட்ட போலீசார், மாணவியருக்கு அளிக்கப்படும் பயிற்சியை பார்வையிட்டனர். மேலும் மாணவியர் கற்ற கராத்தே பயிற்சியை செய்து காட்டினர்.
இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 6 போலீஸ் உட்கோட்டம் உள்ளது. ஒரு உட்கோட்டத்தில், 4 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 6 முதல், 9ம் வகுப்பு வரையுள்ள தலா, 50 மாணவியரை தேர்வு செய்து, தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 பள்ளிகளில், 1,500 மாணவியருக்கு, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில், தகுதியான பயிற்சியாளர் மூலம் தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார பயிற்சி இறுதியில், ஒரு பள்ளிக்கு, 3 மாணவியர் வீதம் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.தலைமை ஆசிரியர் ஜான்காசிம்கான், பனமரத்துப்பட்டி போலீசார், கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் பங்கேற்றனர்.