/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய வார விழா
/
கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய வார விழா
ADDED : ஜன 25, 2025 01:10 AM
கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய வார விழா
சேலம், :சேலம் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:ஆதிதிராவிடர் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல், சம அந்தஸ்துடன் ஒற்றுமையாக வாழ்வதை எடுத்துரைக்கும் வகையில், மனித நேய வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா வரும், 30 வரை நடைபெறுகிறது. விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு நாட்டியம், நாடகம், பேச்சு, கட்டுரை போட்டி, காவல்துறை மூலம் மத நல்லிணக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,
ஆசிரியர்கள், மாணவர்களின் திறனை வெளிகொண்டு வரும் வகையில், அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்க செய்ய வேண்டும். அதிகளவு புத்தகங்கள் படிப்பதன் மூலம் சமத்துவம், சமுதாயம் மற்றும் மனித நேயம் வளர்த்து கொள்ள முடியும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

