/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தோட்டத்தில் மதுபாட்டில்விற்ற வாலிபர் கைது
/
தோட்டத்தில் மதுபாட்டில்விற்ற வாலிபர் கைது
ADDED : ஜன 25, 2025 01:12 AM
தோட்டத்தில் மதுபாட்டில்விற்ற வாலிபர் கைது
தலைவாசல், :வீரகனுாரில், டாஸ்மாக் கடை அருகில் தோட்டத்தில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல் அருகே, வீரகனுார், ராயர்பாளையம் பகுதியில், டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகில் உள்ள விவசாய தோட்டத்தில், நேற்று காலை, 7:00 மணியளவில், மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து, வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான வீரகனுார் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, மதுபாட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்த நபரை பிடித்தனர். விசாரணையில் ஆத்துார், ஜோதி நகரை சேர்ந்த பழனி மகன் வினோத்குமார், 30, என்பது தெரியவந்தது. இவரை, வீரகனுார் போலீசார் கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

