/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓங்காளியம்மன், பத்ரகாளியம்மன்கோவில்களில் இன்று தேரோட்டம்
/
ஓங்காளியம்மன், பத்ரகாளியம்மன்கோவில்களில் இன்று தேரோட்டம்
ஓங்காளியம்மன், பத்ரகாளியம்மன்கோவில்களில் இன்று தேரோட்டம்
ஓங்காளியம்மன், பத்ரகாளியம்மன்கோவில்களில் இன்று தேரோட்டம்
ADDED : ஜன 29, 2025 01:09 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே பல்பாக்கியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓங்காளியம்மன், மக மாரியம்மன் கோவில்களில் தை தேரோட்ட விழா, கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பொடாரியம்மன் பூஜை, சக்தி அழைத்தல், அன்னதானம் நடந்தது. இன்று காலை சக்தி கரகம், பொங்கல் வைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. நாளை மகமாரியம்மன் கோவில் தேரோட்டமும், 31ல் காவடி, மாவிளக்கு பூஜை, சத்தாபரணம், பிப்., 1ல் மஞ்சள் நீராட்டுதல், சுவாமி மெரவனையுடன், விழா நிறைவு பெறும்.
திருவீதி உலாதாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் அம்மன் தேரோட்டம் இன்று மதியம், 1:30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:20 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. நேற்று இரவு, பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, முக்கிய வீதிகள் வழியே சென்று கோவிலை அடைந்தது. இன்று காலை முதல்
அன்னதானம் நடக்கிறது.