/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2025 01:11 AM
குப்பை கொட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி, :அரசிராமணி டவுன் பஞ்சாயத்து, குறுக்குப்பாறையூரில், 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர், மக்கள் வசிக்கின்றனர். அங்கு டவுன் பஞ்சாயத்து சார்பில் சேகரிக்கப்படும் குப்பை கொட்ட ஏற்பாடு நடக்கிறது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி, விவசாயி ராமசாமி தலைமையில் விவசாய சங்கத்தினர், கம்யூ., கட்சியினர், மக்கள் என, 100க்கும் மேற்பட்டோர், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து மாற்று இடம் தேர்வு செய்யக்கோரி, செயல் அலுவலர் தம்பிதுரையிடம் மனு அளித்தனர். இதில், மா.கம்யூ., சேலம் மாவட்ட செயலர் சண்முகராஜா, விவசாய சங்க மாநில துணை செயலர் பெருமாள், மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.