/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
செம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : பிப் 01, 2025 01:12 AM
செம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தாரமங்கலம், :தாரமங்கலம், கீழ்சின்னாக்கவுண்டம்பட்டியில் உள்ள செம்பு மாரியம்மன், விநாயகர், நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 5.00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்தர ஹோமம், மகா பூர்ணாஹூதி, உபகார பூஜை செய்யப் பட்டது. தொடர்ந்து, 9:15 மணிக்கு மேல், யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட, புனித நீரை சிவாச்சாரியார்கள், கோபுரத்துக்கு எடுத்துச்சென்று கலசத்தில் ஊற்றினர். அப்போது, 'கோவிந்தா' கோஷம் எழுப்பி, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல் சக்தி விநாயகர், நாகேஸ்வரி அம்மன் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை செய்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழுவினர், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
யாக பூஜை மகுடஞ்சாவடி அருகே கனககிரி சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள் நடக்க உள்ளது. இதனால் நேற்று காலை கணபதி, சுதர்சன ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து கோ, அஸ்வ பூஜைகள், திருவீதி உலா நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், பரிகார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்தல் நடக்கிறது.
முதலாண்டு விழாபனமரத்துப்பட்டி, ச.ஆ., பெரமனுார் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷக முதலாண்டு விழா நேற்று நடந்தது. அதில் அம்மனுக்கு அபி ேஷகம் செய்து, சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை காட்டினர். தொடர்ந்து புது சப்பர வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. பின் அதை நிறுத்தி வைக்க கட்டப்பட்ட அறை திறப்பு விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.