தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாலிபர் கொலை வழக்குகிணற்றில் மொபைல் மீட்பு

வாலிபர் கொலை வழக்குகிணற்றில் மொபைல் மீட்பு

வாலிபர் கொலை வழக்குகிணற்றில் மொபைல் மீட்பு


ADDED : பிப் 12, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலிபர் கொலை வழக்குகிணற்றில் மொபைல் மீட்பு

சேலம்:சேலம், வீராணம், வீமனுார் காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல், 29. சரக்கு வேன் டிரைவரான இவர், சமீபத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். வீராணம் போலீசார் விசாரித்து, மணியனுார் ரவுடி பிரகாஷ், 38, அவரது கூட்டாளிகள் மாணிக்கம், 32, கனகராஜ், 34, கள்ளக்காதலி வசந்தி, 40, ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கணவரை பிரிந்து வாழ்ந்த வசந்தியுடன், பிரகாஷ் நெருங்கி பழகினார். இவர் சிறையில் இருந்தபோது, பிரகாஷின் நண்பரான குமரவேலுடன், வசந்தி பழகியுள்ளார். சிறையில் இருந்து பிரகாஷ் வெளியே வந்ததும், குமரவேலுடன் பழகியதை நிறுத்திவிட்டு, பிரகாஷூடன் வசந்தி சென்றார். இதில் ஆத்திரமடைந்த குமரவேல், வசந்தியுடன் இருந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டினார். பின் வசந்தி அறிவுறுத்தல்படி, குமரவேலை, பிரகாஷ் கொலை செய்தார். சம்பவத்தின்போது குமரவேலின் மொபைல் போனை, அருகே இருந்த கிணற்றில் பிரகாஷ் வீசியுள்ளார்.

விசாரணைக்கு தேவை என்பதால், 70 அடி ஆழ கிணற்றில் இருந்த தண்ணீரை தீயணைப்பு வீரர்கள், 4 மோட்டார் உதவியுடன் நேற்று முன்தினம் வெளியேற்றினர். பின், மொபைல் போன் மீட்கப்பட்டு அதில் உள்ள வீடியோக்களை எடுக்கும் பணி நடக்கிறது. வசந்தியின் மொபைல் போனையும் கைப்பற்றி விசாரணை தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

*******************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us