தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை


ADDED : பிப் 22, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

சேலம்:சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2023 செப்டம்பரில், தனியார் கல்வியியல் மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். அதில், 16 பேரில், 3 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் அப்போதைய தலைமை ஆசிரியர் பால்ராஜ், அவர்கள் பணிக்கு வந்ததை போன்று, வருகை பதிவேடு தயாரித்துள்ளார். இதுகுறித்து கல்வி அலுவலர்களுக்கு புகார் சென்றது. அப்போதைய சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா விசாரித்து, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பினார்.

இந்நிலையில் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஞானகவுரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி பால்ராஜூக்கு ஊதிய உயர்வு, 2 ஆண்டு நிறுத்தி வைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us