/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சென்டர் மீடியனில்கார் மோதி பூசாரி பலி
/
சென்டர் மீடியனில்கார் மோதி பூசாரி பலி
ADDED : பிப் 22, 2025 01:28 AM
சென்டர் மீடியனில்கார் மோதி பூசாரி பலி
சேலம்:சேலம், திருவாக்கவுண்டனுார், கண்ணகிரி தெருவை சேர்ந்தவர் கண்ணன், 24. பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள முருகன் கோவில் பூசாரியாக இருந்தார். திண்டிவனத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, 5 நண்பர்களுடன், நேற்று முன்தினம் இரவு, 'இன்னோவா' காரை ஓட்டிச்சென்றார்.
நள்ளிரவு, 1:30 மணிக்கு காரிப்பட்டி அருகே சென்றபோது, சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் சிக்கியிருந்த கண்ணனை, மக்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் உயிரிழந்தார். மற்ற, 5 பேரும் காயமின்றி தப்பினர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

