/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
படிப்படியாக சரிந்து வந்தமேட்டூர் நீர்வரத்து உயர்வு
/
படிப்படியாக சரிந்து வந்தமேட்டூர் நீர்வரத்து உயர்வு
படிப்படியாக சரிந்து வந்தமேட்டூர் நீர்வரத்து உயர்வு
படிப்படியாக சரிந்து வந்தமேட்டூர் நீர்வரத்து உயர்வு
ADDED : பிப் 22, 2025 01:30 AM
படிப்படியாக சரிந்து வந்தமேட்டூர் நீர்வரத்து உயர்வு
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம்,
120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் கடந்த மாதம், 8ல், 694 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 9ல், 831 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து, 12ல், 674; 13ல், 555; 14ல், 381; 16ல், 254; 17ல், 151 கன அடி என, படிப்படியாக சரிந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு, 167 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 641 கனஅடியாக அதிகரித்தது. நேற்று அணை நீர்மட்டம், 109.95 அடியாகவும், நீர் இருப்பு, 78.33 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. குடிநீருக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தில் இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் அணை நீர்மட்டம் சற்று அதிகரிக்க
வாய்ப்புள்ளது.