/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழநியில் இருந்து காவடிகளுடன்இடைப்பாடி திரும்பிய பக்தர்கள்
/
பழநியில் இருந்து காவடிகளுடன்இடைப்பாடி திரும்பிய பக்தர்கள்
பழநியில் இருந்து காவடிகளுடன்இடைப்பாடி திரும்பிய பக்தர்கள்
பழநியில் இருந்து காவடிகளுடன்இடைப்பாடி திரும்பிய பக்தர்கள்
ADDED : பிப் 27, 2025 02:21 AM
பழநியில் இருந்து காவடிகளுடன்இடைப்பாடி திரும்பிய பக்தர்கள்
இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தனித்தனி குழுக்களாக காவடி கட்டி, பழநி முருகரை தரிசிக்க செல்கின்றனர்.
நடப்பாண்டும் வெள்ளாண்டிவலசு சமுதாயம்; வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி ஆதிபரம்பரை; பருவதராஜகுல மீனவ மக்கள், மேட்டுத்தெரு, ஆலச்சம்பாளையம், சித்துார், புளியம்பட்டி காவடி என பல்வேறு குழுவினரும், 350க்கும் மேற்பட்ட காவடிகளுடன், கடந்த, 7 முதல் நடைபயணத்தை தொடங்கினர். கடந்த, 13, 14, 15, 17, 19 ஆகிய நாட்களில், பழநி மலை முருகரை தரிசனம் செய்தனர். 19 இரவு, மலையில் தங்கிய பருவதராஜகுல சமுதாய மக்கள், அன்று இரவு நேர பூஜை செய்தனர். பின், மீண்டும் காவடிகளை எடுத்துக்கொண்டு நடைபயணமாகவே, பக்தர்கள் இடைப்பாடிக்கு புறப்பட்டனர்.
சில நாட்களாக தினமும் பல்வேறு குழுக்களாக, இடைப்பாடி திரும்பினர். இறுதியாக பருவதராஜகுல சமுதாயத்தினர், நேற்று இடைப்பாடி திரும்பினர்.