/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாதகாப்பட்டி உழவர் சந்தையில்டிஜிட்டலில் பண பரிவர்த்தனை
/
தாதகாப்பட்டி உழவர் சந்தையில்டிஜிட்டலில் பண பரிவர்த்தனை
தாதகாப்பட்டி உழவர் சந்தையில்டிஜிட்டலில் பண பரிவர்த்தனை
தாதகாப்பட்டி உழவர் சந்தையில்டிஜிட்டலில் பண பரிவர்த்தனை
ADDED : மார் 10, 2025 01:38 AM
தாதகாப்பட்டி உழவர் சந்தையில்டிஜிட்டலில் பண பரிவர்த்தனை
சேலம்:உழவர் சந்தைகளுக்கு வரும் நுகர்வோர் பெரும்பாலும் உரிய தொகையை தராமல், 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை தந்து காய்கறிகள் வாங்குகின்றனர்.
இதனால் சில்லரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 'டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை' அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்' வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை தாதகாப்பட்டி உழவர்சந்தையில் விவசாயிகள் பெயரில் முதலீடின்றி, சேமிப்பு கணக்கு தொடங்கி, அதற்கான கியூ.ஆர்., குறியீடு வழங்கப்பட்டது. ஒரே நாளில், 10 விவசாயிகளுக்கு கணக்கு தொடங்கி, குறியீடு வசதி செய்து தரப்பட்டது. இனி நுகர்வோர் காய்கறி தொகையை, கியூ.ஆர்., கோடை, மொபைல் போனில் ஸ்கேன் செய்து பரிவர்த்தனை செய்துவிடலாம். விவசாயிகள் அருகே உள்ள அஞ்சலகம் சென்று, ஆதார் கார்டு, மொபைல் எண் வழங்கி, கைவிரல் ரேகையை பதிவு செய்த பின், அவரது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'நுகர்வோர் பணம் செலுத்தியதும், விவசாயி மொபைலுக்கு குறுந்தகவல் அல்லது வாய்ஸ் மெசேஜ் வரும். மேலும் நுகர்வோர் மொபைலில், விவசாயி பெயர், கணக்கு எண் பதிவாகும். அந்த பதிவை காட்ட சொல்லி விவசாயிகள், பண வரவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.
13 சந்தையிலும் நடவடிக்கைதமிழ்நாடு அனைத்து விவசாய ச